
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிந்தால் பிசிசிஐ மற்றும் ஆடுகளங்கள் மீது இழிவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் தோற்கும்போது, ஆடுகளத்தில் குறை இருப்பதாகக் கூறுவது இரட்டை நிலைப்பாடு என அவர் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வெறும் 2 நாட்களில் முடிவடைந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.