
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 2 சதவீத மக்களுக்கு 'டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி' (DSS) எனும் ஆபத்தான பின்விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த ஆபத்தான நிலையில் நோயாளியின் ரத்த அழுத்தம் திடீரென குறைந்து, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் இதயச் செயலிழப்பும் ஏற்படக்கூடும்.
இந்த அறிகுறி தென்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.