
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒன்ஸ்மோர்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை இயக்கிய விக்னேஷ் ஸ்ரீகாந்த் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளதோடு, மில்லியன் டாலர் யுவராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இயக்குநர் இரா.சரவணன் இப்படத்தைப் பார்த்துவிட்டு, அர்ஜுன் தாஸின் நடிப்பு மற்றும் படத்தின் இசை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.