
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி திருப்பூர் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி ஷியாம் சுந்தரின் சதத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இலக்கை நோக்கி ஆடிய திருப்பூர் அணி, துஷார் ரஹேஜாவின் 87 ரன்கள் மற்றும் ப்ரதோஷ் ரஞ்சன் பாலின் 44 ரன்களுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.