
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் 10,021 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் அரக்கோணம்-ரேணிகுண்டா, ஓசூர்-ஓமலூர் மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 384 கி.மீ. தூரத்திற்கு கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டங்கள் மூலம் ஆண்டுக்கு 4.70 டன் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதோடு, 2,121 கிராமங்களைச் சேர்ந்த 52 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.