
வியட்நாமில் நடைபெற்று வரும் சூப்பர் 100 அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா மற்றும் பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறியுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தான்வி சர்மா 21-18, 15-21, 21-14 என்ற கணக்கில் மாளவிகா பன்சோத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய் 28-26, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் சான்ஸ்கர் சரஸ்வத்தை தோற்கடித்தார்.