
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.