
தென்கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளைப் பெருமளவில் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் முயற்சியில் இணைய தென்கொரியா மறுத்ததால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பயிற்சிகளுக்கு அதிக செலவாவதாகவும், அந்தச் செலவில் பெரும்பகுதியை அமெரிக்காவே ஏற்பதாகவும் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.