
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம்-திரில்லர் படமான 'விடியும் காத்திரு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆர்.அரவிந்தராஜன் இயக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சி.சத்யா இசையமைத்துள்ளார்.
ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் காவல் அதிகாரிகள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்ட இப்படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.