
துபாயில் நடைபெறும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது, இதில் முனீபா அலி 54 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார்.
தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், பாகிஸ்தான் வீராங்கனை சாடியா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.