
சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,13,600-க்கு விற்பனையானது.
ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச காரணங்களால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில், நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்திருந்தது.