சவுதி புரோ லீக் கால்பந்துத் தொடரில் அல் நஸ்ர் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியைத் தோற்கடித்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.
62-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, 83-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது கால்பந்து வாழ்க்கையில் 977-வது கோலைப் பதிவு செய்தார்.
அல் நஸ்ர் அணிக்காக அப்துல்லா அல்-அம்ரி, ஏஞ்சலோ கேப்ரியல் மற்றும் ஜோவா பெலிக்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.