தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் இரவோடு இரவாக பச்சை நிற ஒட்டுத்தாள் மூலம் மறைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி உதவிக்கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.