/polimer-news/media/media_files/2026/09/30/11-2026-09-30-13-03-45.jpg)
டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மேலும் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும்.