
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை வீராங்கனை சமுதி பிரபோதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசத்தின் ஷ்ஹானா மொஸ்டிரி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்த நிலையில், 115 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.