
சவுதி அரேபியா தம்மாம் நகரில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நாட்களாக சவுதி விமான நிலையங்கள் மீது எறிபொருட்களை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சவுதியில் பதற்றம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.