
சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றது, திமுக-பாஜக இடையிலான நேரடி கூட்டணியை உறுதிப்படுத்துவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்குகளில் இருந்தும், ஊழல் பணத்தில் இருந்தும் தப்பிக்க திமுக பாஜகவின் கொத்தடிமையாக மாறிவிட்டதாக அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடு மற்றும் சொத்து வரி முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.