
ஒலிம்பிக்ஸ் சாம்பியன் நீரஜ் சோப்ரா பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் சதைக் கிழிவு காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பானின் நகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கவிருந்த 492 வீரர்களில் இவரும் ஒருவர்.
மருத்துவக்குழுவின் ஆலோசனையின்படி இந்த சீசனில் ஓய்வு எடுப்பதாகத் தெரிவித்துள்ள நீரஜ், 2020 ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் 2024-ல் வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.