
2019-ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய இலங்கை முன்னாள் காவல் துறை அதிகாரி புஜித் ஜெயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 279 பேர் உயிரிழந்தனர் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு சிறப்பு ஐகோர்ட்டு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கையில் 1976 முதல் மரண தண்டனைக்குத் தடை இருப்பதால், 66 வயது புஜித் ஜெயசுந்தர மற்றும் 76 வயது ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற வாய்ப்புள்ளது.