
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் 40 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாக்கர் 28 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.