
கினியாவின் தலைநகர் கோனாக்ரியில் உள்ள 'தார் எஸ் சலாம்' குப்பை கிடங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் பெய்த பலத்த மழையால் குப்பைகள் சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டன, இதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.