
அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோருக்கு செலவின்றி, வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்துவதுடன், எதிர்காலத்தில் எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.