
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்ச புகார் தொடர்பாக சென்னை பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொழில் அதிபர் சண்முகபிரியா வீட்டில் 10 பேர் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தனக்கு ஜாமின் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.