
மகாராஷ்டிராவின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில், ஐபோன் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் 19 வயது இளைஞன் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதர் சாந்த்குடே நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் மலையிலிருந்து குதித்து உயிர் மாய்த்துக் கொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.