
ஆமதாபாத்தில் தொடங்கிய முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது.
போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 73-13 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி 46-26 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.