
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.