
தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் சிக்கிய பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே தீவிரம் காட்டியுள்ளதுடன் ஒரே நாளில் 149 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் 149 மி.மீ., தாலுகா அலுவலகத்தில் 153 மி.மீ., மற்றும் பொங்கலூரில் 160 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளதுடன், உடுமலை ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தற்போது பெய்துள்ள மழையால் தென்னை மரங்களுக்கு பாசன நீர் கிடைப்பதுடன் வறண்ட குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.