
தன்னை கைது செய்ததன் மூலம் தவெக அரசு திமுகவினரை மிரட்டப் பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மற்றும் Gen Z அணியினரை போலீசார் குறிவைத்து கைது செய்வதாகக் கூறிய உதயநிதி, கோவை மாணவர் மரணத்திற்கு திமுக நீதி பெற்றுத் தரும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மாணவர் மரணம் கோஷ்டி பூசலால் நிகழ்ந்ததாக அமைச்சர் கூறுவதை மறுத்துள்ள உதயநிதி, தவெக அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பிரச்சனையில் சிக்குவார்கள் என எச்சரித்துள்ளார்.