Health & Environment
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,905 கனஅடியாக உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வந்து சேர்ந்ததை அடுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது.

2

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.55 அடியாகவும், நீர் இருப்பு 36.74 டிஎம்சியாகவும் உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

3

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடித்தது.