
வெளிநாட்டு தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, ஜியோ நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் 11,303 பணியாளர்களைக் கொண்டு உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.
4ஜி, 5ஜி நெட்வொர்க் சாதனங்கள் மற்றும் மென்பொருட்களைத் தாண்டி, நெட்வொர்க் சிக்கல்களைக் கண்டறிய 'ஜியோபிரைன்' என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தொழிற்சாலைகளுக்கான தனியார் 5ஜி வலையமைப்பு, கிளவுட் சேவை மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட டிஜிட்டல் கட்டமைப்புகளை ஜியோ தற்போது விரிவுபடுத்தி வருகிறது.