
தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக மற்றும் அதிமுக முடிவு செய்துள்ளன.
மக்களவை தொகுதிகள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி பங்கீடு மாறக்கூடாது என்றும் திமுக வலியுறுத்துகிறது.
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலில் கூட்ட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.