ரேஷன் கார்டு பயனாளிகளுக்கான இ-கேஒய்சி (e-KYC) மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
வெளிமாவட்டங்களில் வசிப்பவர்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவே கடைசி வாய்ப்பாகக் கருதப்படுவதால், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது, அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.