
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் சாரா அகமது தாக்கல் செய்த இந்தத் தீர்மானத்திற்கு, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இணைய பயன்பாட்டால் சிறார்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதைத் தடுக்க, மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என மாகாண அரசு வலியுறுத்தியுள்ளது.