
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் ஃபாத் சர்வதேச விமான நிலையமும் குறிவைக்கப்பட்டதுடன், காமிஸ் முஷைத் நகர் நோக்கிய பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டணி உறுதியான கடுமையான பதிலடியை வழங்கும் என இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் தெரிவித்தார்.