
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அணில்குமார் நடிப்பில் வெளியான கிராமத்துத் திரைப்படமான ‘மொத ராத்திரி’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்ற இப்படம், தனுஷ் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பிரபலங்களின் பாராட்டைப் பெற்றது.
கடந்த செப்டம்பர் 18 முதல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் இப்படம் நெட்ஃப்ளிக்ஸின் டிரெண்டிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.