கால்கள் அடிக்கடி மரத்துப்போவது பெரிஃபெரல் நியூரோபதி எனும் நரம்பு பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என டெல்லி மணிப்பால் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் ஸ்வேதா சிங்லா எச்சரித்துள்ளார்.
சர்க்கரை நோய், வைட்டமின் பி12 குறைபாடு, தைராய்டு மற்றும் அதிகப்படியான மதுப்பழக்கம் ஆகியவை நரம்பு பாதிப்புக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
மரத்துப்போகும் உணர்வு நீடித்தால் நரம்பு கடத்தல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் பாதிப்பை கண்டறிந்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் நரம்புகளைப் புதுப்பிக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.