Technology
கட்டடக் கழிவுகளில் இருந்து புதிய கட்டடம் அமைத்து சிஎஸ்ஐஆர் சாதனை

கட்டடக் கழிவுகளில் இருந்து புதிய கட்டடம் அமைத்து சிஎஸ்ஐஆர் சாதனை

ETV Bharat2h
THE BRIEF
1

சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-SERC) பழைய கட்டடங்களை இடிக்கும்போது உருவாகும் கழிவுகளைக் கொண்டு புதிய கட்டடத்தை எழுப்பி அசத்தியுள்ளது.

2

கழிவில் இருந்து செல்வம் என்ற திட்டத்தின் கீழ், 1,953 சதுர அடி பரப்பளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட மணல், ஜல்லிக் கற்கள் மற்றும் எஃகு கம்பிகளைப் பயன்படுத்தி இந்தத் தரைத்தளம் மற்றும் முதல் தளக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

3

மறுசுழற்சி செய்யப்பட்ட எஃகு கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம் கார்பன் உமிழ்வு 32% குறைந்துள்ளதோடு, வழக்கமான கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது 55% வரை செலவும் குறைந்துள்ளது.