
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா இயக்கி வந்த ஆளில்லா கடல் டிரோனைக் கைப்பற்ற முயன்றதாகக் கூறி, ஈரானின் 2 சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா கடல் டிரோன் சுமார் 8 மீட்டர் நீளமுடைய 'செயில்டிரோன்' வகையைச் சேர்ந்தது என்றும், அது தானாக இயங்கக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் சூழலில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.