
இஸ்ரோவை தனியார் மயமாக்கவோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் 'பாரதிய அந்தரிக்ஷ்' விண்வெளி நிலையத்தை அமைப்பதிலும், 15 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் இஸ்ரோ கவனம் செலுத்தும்.
இஸ்ரோ தலைவர் நாராயணன் கூற்றுப்படி, ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் தேவைப்படுவதால், வணிக ரீதியான உற்பத்திக்கு மட்டுமே தனியார் துறையின் ஒத்துழைப்பு பெறப்படுகிறது.