/polimer-news/media/media_files/2026/10/31/vlcsnap-2026-10-31-12h39m29s936-2026-10-31-12-39-43.png)
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து கொள்ளை வழக்கு விசாரணைக் கைதியான ராகவன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 4 போலீசார் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
கைதிக்கு கை விலங்கை அவிழ்த்தபோது போலீசாரைத் தள்ளிவிட்டுத் தப்பியதால், கவனக்குறைவாகச் செயல்பட்ட அந்த 4 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.