முன்னோர்களுக்கு இதய பாதிப்பு இருந்தால் வாரிசுகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்புள்ளதால், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்.
இதய நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லிப்போ புரோட்டீன் மற்றும் இதய கால்சியம் (CT Calcium Score) பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
மது மற்றும் புகைப் பிடித்தலைத் தவிர்த்து, காய்கறிகள் நிறைந்த உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.