
மதுரை மாவட்டம் மேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட FQL நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, கைதானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை பெறப்பட்ட மொத்த புகார்களின் எண்ணிக்கை சுமார் 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்டோர் அளித்த புகார்களின் மூலம் சுமார் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் வரை பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.