
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகத் தனியாக 'காண்டக்ட்ஸ் டேப்' புதிய வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தொடர்புகளை ஒரே இடத்தில் பார்க்க முடிவதுடன், ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகில் பச்சை நிறப் புள்ளி காட்டப்படும்.
மேலும் தொடர்புகளின் பிறந்தநாள் விவரங்களை அறிந்து கொண்டு கேக் எமோஜியுடன் வாழ்த்துத் தெரிவிக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.