/nakkheeran/media/media_files/2026/09/28/vidya-ramraj-2026-09-28-16-33-06.jpg)
ஜப்பானின் ஐச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
வித்யா ராம்ராஜ் 54.75 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, பிடி உஷாவின் 42 ஆண்டுக்கால சாதனையான 55.42 விநாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா இதுவரை மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது, இதில் மகளிர் மற்றும் ஆடவர் கபடி அணிகள், மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கமல்ஜீத் - சுருச்சி சிங் இணை ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.