
துருக்கியில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்கா நோக்கிச் சென்ற கமரூன் நாட்டுச் சரக்குக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் இயல் மாவட்டத்திலிருந்து 4 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றபோது இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
கடத்தப்பட்ட இந்தக் கப்பலில் 6 இந்தியர்கள் உட்பட மொத்தம் 10 மாலுமிகள் பயணித்த நிலையில், இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.