
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் நானா-மாம்பேரே மாகாணத்தில் உள்ள ஜாம்போய் கிராமத்தில், ஆகஸ்ட் 18 அன்று பாரம்பரிய தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாததால் அடிக்கடி நிகழும் இத்தகைய விபத்துகள் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.