பெரியவர்களை மட்டும் அச்சுறுத்தி வந்த டைப் 2 நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
3 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8.40 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும், 12.40 சதவீதம் பேர் அதிக உடல் எடையாலும் அவதிப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடல் செல்கள் இன்சுலினை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், முறையற்ற உணவு முறைகள் மற்றும் உடலியக்கமின்மை போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.