
இந்தியாவில் வர்த்தக வாகன விற்பனை கடந்த ஆண்டு ஜூலையில் 72,776 ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 26 சதவீதம் உயர்ந்து 91,760 வாகனங்களாக அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் 33,876 வாகனங்களை விற்பனை செய்து 28 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, மேலும் ஏற்றுமதி 128 சதவீதம் உயர்ந்து 5,765 வாகனங்களாக உள்ளது.
அசோக் லேலண்டு கனரக வாகன விற்பனை 43 சதவீதமும், மாருதி நிறுவனத்தின் விற்பனை 40 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.