
நெல்லை மாவட்டம் வெள்ளங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமார் - மங்கையர்திலகம் தம்பதியின் மூன்று மகன்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், இரட்டை சகோதரர்களான அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த மூன்று மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.