Education
நீட் தேர்வில் சாதனை: நெசவாளர் தம்பதியின் மூன்று மகன்களுக்கும் மருத்துவ சீட்

நீட் தேர்வில் சாதனை: நெசவாளர் தம்பதியின் மூன்று மகன்களுக்கும் மருத்துவ சீட்

Oneindia Tamil1h
THE BRIEF
1

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமார் - மங்கையர்திலகம் தம்பதியின் மூன்று மகன்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

2

மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், இரட்டை சகோதரர்களான அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

3

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த மூன்று மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.